அம்மா-அப்பா கருப்பு-வெள்ளை ஜோடியாக இருந்தா வீடு கொஞ்சம் கலகலப்பாவே இருக்கும். அம்மா வீட்ல இருக்கவங்க எல்லாரும் வெள்ளையா இருந்து அப்பா வீட்ல இருக்கவங்க கருப்பா இருந்தா இன்னும் சுவாரிஸ்யமா இருக்கும்...
அப்படிபட்ட வீடு தான் என்னுடையதும். (அதனால அம்மா கருப்பு - அப்பா வெள்ளை ஜோடி பத்தி அனுபவங்கள கேள்விபட்டதில்ல ஆனா பாத்திருக்கேன்). எப்பாவது வீட்டு விஷேத்துல விளையாட்ட கருப்பு வெள்ளை டாபிக் வந்து கருப்பு பக்கம் அழுத்தம் அதிகம் ஆச்சுனா முதல்ல கருப்புக்கு, அப்பாவுக்கு துணை நிக்கிறது எங்க அம்மா தான். சில நேரத்தில் உறவுகள் கோபத்தில இல்லனா அறியாம கருப்பு நிறத்தவங்கள சுருக்குன்னு பேசினா அதுக்கும் சரியான பதிலடி கொடுக்கறது எங்க அம்மா தான்.
ஒரு நாள் எங்க அம்மாவோட தங்க (சித்தி, தொத்தா) வீட்டுக்கு போகும் போது, எப்பவோமா கிண்டல் பண்ணுற தொத்தா, நான் உள்ள வந்த பிறகு "என்னடா கருப்பா எப்படி இருக்க?"னு கேட்க நான் உடனே "என் தோல் தான் கருப்பு, ஆனா என் மனசு வெள்ளைனு" சொல்லிட்டேன். அதை கேட்ட அம்மா கொஞ்சம் சந்தோஷமும் மிரண்டும் போய் தொத்தாவ பாத்து சிரிக்க, ஆமா... நான் அப்படி கேட்ட இப்படி தான் பதில் சொல்லுவான் சொல்லிகிட்டே வொயிட் காஃபி போட போனாங்க.
இந்த சம்பவம் நடந்து கொஞ்ச நாள் கழிச்சு எங்க அம்மா எப்பவும் போல, பேப்பர் படிச்சுட்டு, படிக்கும் போது போடுற கண்ணாடிய தையில் மெஷின் மேல வச்சிட்டு, அவங்க படிச்ச மார்ட்டின் லூதர் கிங், கதைய சொன்னாங்க...
அதில வந்த சம்பவங்கள் என் மனசுல ஆழமா பதிஞ்சுடுச்சி... எப்படி அந்த வெள்ளை நிற குழந்தைகள் கருப்பு நிற குழந்தைகள நிராகரிச்சாங்க, பஸ்ல சீட்டு காலியா இருந்தும் கருப்பு நிறத்தவங்கள எப்படி உட்காரவிடல அப்டி மறந்து உட்காந்தவங்கள ஓடுற பஸ்ல இருந்து தூக்கி எரிஞ்சாங்க, கல்லூரில, சமுதாயத்துல கருப்பு நிறத்தவங்கள எப்படி ஒதுக்குனாங்கனு பல சம்பவங்கள் இப்பவும் வந்து போகும்.
இத விட,கருப்பு நிறத்தவங்கள அடிமை படுத்தி வேலை வாங்கும்போது அடிக்கடி தப்பிக்கற அடிமைகள நிறுத்தி வைக்க, அவங்க பிள்ளைங்க கழுத்துல சுருக்கு மாட்டி அந்த சுருக்கு கயிறோட முனைய தந்தை காலுல கட்டிடுவாங்க, இப்டி குழந்தையோட மரண பயத்தை வச்சு வேலை வாங்கினது ஆழமா பதிஞ்சுடுச்சி.
இப்படி பட்ட சவால்ல மார்ட்டி வென்றத நினச்சா எப்போமா ஒரு உற்சாகம் வருது.
எங்க அம்மா சொன்ன கதை என்ன எப்போவுமே நிற வேறுபாடு மத்தியில தல நிமிர்ந்து நடக்க செய்யுது.