சுமார் பத்து வருஷத்துக்கு முன்னாடி அப்பாவோட வீட்டுக்கடனை அடைச்சி முடிச்ச பிறகு அண்ணனோட வீட்டுக் கடன் வாங்குவதற்கு சந்தோஷமா தயாராக இருக்கும் ஆமா நம்மள நம்பி கடன் தருவது ஒரு நல்ல விஷயம் தானே அன்னைக்கு அப்பகட காவி கட்டின வீடு அப்புரோவல் பிளான் பெரிய எதிரி சீட்டில் சென்னை ஏர்போர்ட் அல்ல இரண்டு செராக்ஸ் போட்டு தெரிஞ்ச பில்டர் பிளான்
பில்டர் பேனர்கட்ட எடுத்துட்டு போய் இருந்தோம் அந்த ஜெராக்ஸ் பார்த்துட்டு
ஒரிஜினல் காப்பி கொடுங்க அப்படின்னு கேட்டார் இந்த ஒரிஜினல் வாங்கி பார்த்த பிறகு "பரவாயில்லையே நிறைய காலியிடம் இருக்கே..! பெருசா கட்டலாமே..!"ன்றார்
இல்லைங்க..! மாடியில் வீடு கட்ட தான் இப்போ பிளான் பண்ணிட்டு இருக்கோம் மிச்ச இடத்தை பியூச்சுர் யூஸ் பண்ணிக்கலாம்னு வெச்சிருக்கோம்.
ஓஹோ.. சரி.! னு சொல்லி பிளான் போட்டு கொடுத்தாரு அப்படியே வாங்கிட்டு வந்துட்டோம். அன்னைக்கு நைட்டு அந்த பில்டர் பிளான் போடும் போது எங்க இடத்தை 'எவ்ளோ பெரிய இடம்'னு சொன்னதை இருபது நிமிஷம் பேசி சந்தோஷப்பட்டு இருப்போம். இருக்க ஒரு இடமும், நல்ல வீடும், தண்ணிக்கு ஒரு கிணறும் அமையரளவு அப்பா அம்மா எடுத்து அந்த முயற்சியை அந்த நைட்டு, அந்த வாரம் முழுசா பேசி தீர்த்தோம்.
ஆறில் ஒரு பங்கு வீடு மாடிப்படி, பால்கனி, வீடு னு அமைய மீதி 5 பங்கு கிணறு மாமரம் எலுமிச்சை செடி வாழை மரம் ரோஜா வாழை, கனகாம்பரம், கருவேப்பிலை, இரண்டு மூன்று வேப்ப மரம்னு செழிச்சு கெடந்துச்சு காலையிலிருந்து இந்த செடிங்க நடுவுல வந்து அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து கொண்டே அந்த பிரஸ் பண்ணிட்டா காலை நல்லா ஆரம்பிக்கும்.
அப்ப இருந்த நேரத்தில் எனக்கு கல்யாணம் நடக்காதுனு யோசிச்சு இல்லையோ கண்டிப்பா வீடு கட்டுவேன்னு யோசிக்க கூட இல்ல - வேற ஏதோ பெருசா செய்ய போறோம்னு இருந்தாச்சு. ஒரு வேலை வீடு கட்டுறத சினிமால ஹீரோயிசமா காமிச்சா அத பத்தி யோசிச்சி இருப்போம் போல..!
பல மாசமா பேசி வச்சி நடந்து இருந்தாலும் அந்த விஷயம் மட்டும் சட்டனு நடந்ததா போல நெனச்சுக்கிட்டு இருப்போம். அப்படித்தான் அன்னைக்கு வீடு கட்ட இடத்தை அளக்க அடுத்த வாரம் மேஸ்திரி வர வைக்கணும்னு முடிவு எடுத்து அந்த 6 பங்குல 5 பங்கா இருந்த மரத்தை எல்லாம் வெட்ட சடார்னு ஆள் வந்து நின்னாங்க.
அந்த ஆளுக்கு வந்து 'என்னமா மாமரம் பால் மரமாச்சே இது அப்படியே வெட்டக்கூடாது'னு சொல்லி மஞ்சள் குங்குமம் எடுத்து வரச்சொல்ல அப்படியே ஒரு டம்ளர் பாலையும் கொண்டு வர சொன்னாங்க. வீட்டுல இருக்க எல்லாரையும் வரச் சொல்லிட்டு பால்மரத்த வெட்டுறதுக்கு முன்னாடி மஞ்சள் குங்குமம் வெச்சு கற்பூரம் ஏத்த சொல்ல அம்மாவும் அப்படியே செஞ்சாங்க.! அது என்னவோ வாரா வரம் சட்னிக்கு தேங்காய் தந்த தென்னை மரத்தை பெருசா எடுத்துக்கல ஆனால் வருஷத்துக்கு ஒரு தடவை மாங்க காய்க்கிற இந்த மாமரத்துக்கு மட்டும் பூஜை எல்லாம் செஞ்சு அதை வெட்ட தயாரா இருந்தாங்க
சரி சாமி கும்பிட்டாச்சு இந்த மரத்தை வெட்டினால் பாவம் இல்லை என்று சொல்லி எல்லா மரத்தையும் வெட்டி தரைமட்டமாக்கி வீடு கட்ட தயாராகிட்டோம்.
அன்னைக்கு அந்த மேஸ்திரி அளந்து கொடுத்த ஆறு மாசத்துலேயே மாமரம் இருந்த இடத்தில் வீட்டோட சாமி அறையும் எலுமிச்சம் இருந்த இடத்திலேயே படுக்கை அறையும் ரோஜா இருந்த இடத்துல பால்கனினு எல்லாம் கட்டிடமாக மாறிடுச்சு
வீட்டுக்கு ஒரு மரம் வேணும்னு சொல்லி என் வீட்டு செவுத்துல மரத்தை சிமென்டுல வரஞ்சிட்டேன. மாற்றம் ஒன்று தானே வாழ்க்கை ஆமா உயிர் உள்ள மரம் எல்லாம் போயிட்டு இன்னிக்கு செவுத்துல சிமெண்டு மரமா நிக்குது
அப்படியே இந்த வீட்டோட பரனை போடும்போது ஒன்றை அடி வெச்சா பக்கத்து வேலைக்கு போகும்னு மேஸ்திரி சொல்ல அதுக்கு கிட்டத்தட்ட குடும்பமா சேர்ந்து என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போது எது பிரச்சினையா இருக்காதோ அத பண்ணிட்டு போங்கனு சொல்லி முடிவெடுத்தாச்சு
அப்பத்தான் நிறைய இடம் இருக்குனு சொன்ன அந்த பில்டர் ஞாபகம் வந்தது நிறைய இடம் இருந்து என்ன இடத்துக்கு ஏத்த மாறி வீடு கட்ட மனசில்ல/ மனசுக்கேத்த இடம் இல்ல. அப்படி யோசிச்சிட்டு பைக் எடுத்துட்டு கிளம்பிட்டேன். ரோட்டுல போகும் போது 600 சதுர அடி 800 சதுர அடி 1200 சதுர அடியில் மனைகள் விற்பனைக்கு வரும் விளம்பரம் பார்க்கும்போதுதான் தோணுது இந்த நடுத்தர வர்க்கத்துக்கு இது (காம்பௌண்ட் வீடு ) போதும் அப்படின்னு சொல்ற மாதிரி இருந்திச்சி. ஒருவேளை மரம் செடி வச்சுக்கிற அளவுக்கு நமக்கு அறிவும் திறமையும் இல்லையோ இல்ல அந்த அறிவையும் திறமையையும் விலை பேசி விக்கிற அளவுக்கு திறமை இல்லையேன்னு யோசிக்க வைக்குது. இன்னொரு பக்கம் யோசிச்சா அந்த மரம் செடிகள் எல்லாம் நம்ம வீட்டிலேயே இருக்கணும் னு ஆறடி வீட்டை சுத்தி விட மனசு இல்லையோனு யோசிக்க தோணுது.
சிரி ஆகுற வழியை பார்ப்போம்னு நம்ம விளையாட காலியிடம் இருந்ததுபோல நம்ம குழந்தைகள் தெருவுல இருக்க எடத்துலயும் / ஏரியால ஒரு மூளையில் இருந்த பூங்காவா சரிசெய்ய கிளம்பினேன்.
No comments:
Post a Comment