Monday, October 7, 2024

காமம் காதல் கல்யாணம்

எல்லா மதத்திலும் ஆணுக்கு ஒரு மிகப் பெரிய பதவி இருக்கு... என்னன்னா துறவி தாங்க  அதுலயும் கல்யாணம் ஆகாத துறவிதான் உயர்ந்தவரா காட்டப்படுவார்கள் ரிஷியா இருக்கட்டும் இல்ல சூஃபி-யா இருக்கட்டும் இல்ல நம்ம ஃபாதர்ரா இருக்கட்டும் ஏன் பௌத்தம் சமணம் அப்படின்னு எடுத்துகிட்டா கூட பல இடங்களிலும் கல்யாணம் ஆகாத ஆண்களை தான் நம்ம அந்த மதத்துடைய தலை சிறந்த தலைவராக பார்க்கிறோம்.

இத பத்தி யோசிக்கும்போது ஓஷோ-வோட ஒரு தத்துவம் தான் தோணுது 
எந்த ஒரு மரத்து மேல ஒரு துணியை மூடி வைத்தால் மனுஷனுடைய மூளை என்ன செய்யுமா அந்த துணியை கழட்டி அதுக்குள்ள என்ன இருக்குனு பார்க்க தோனும் மணுஷனுக்கு

ஆனா நம்ம ஊர்ல இல்ல இந்த உலகத்துல பல இடத்துல - அந்தத் துணிக்கு மஞ்சள் குங்குமம் என்ற முலாம் பூசி நம்ம கண்ணத்தில போட்டுக்குனு கையெடுத்துக் கும்பிட்டு அதை வணங்கி விட்டு சாஷ்டாங்கமாக தொப்புள்ல மண்ணு படுற அளவுக்கு கும்பிடுறோம். இப்படி பக்தி உணர்வ கொண்டு அந்தக் ஆர்வத்த கம்மி பண்றோம். 

இந்த காமம் என்ற உணர்வ கட்டுப்படுத்த நம்மளா வகுத்துக்கொண்ட ஒரு விஷயம் இந்த பிரம்மச்சாரியம். சமூக ஒழுங்க கடைபிடிக்க உதவறதும் இதுதான். இது ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு பெற்றோர்களும் சிறுவயதிலிருந்தே ஆண்களுக்கு போதிக்கப்பட்ற ஒரு விஷயம். ஒரு பெண்ணுக்கு பிரம்மச்சரியத்தை சொல்லித்தராங்களோ இல்லையோ (பதிலா கற்பு இருக்கும்) ஒரு ஆணுக்கு கண்டிப்பா அந்த மதம் ப்ரம்மச்சாரியாத்த சொல்லி தருது. பெண்கள்களுக்கு என்னவோ அவர்களுடைய வாழ்க்கை ஒரு குழந்தை பிறந்தால் தான் நிறைவடைவதாக ஒவ்வொரு மதமும் சொல்லுது அது  என்ன பயம்னா பெண்கள் எல்லாம் இங்க துறவி ஆயிட்டா ஜனத்தொகை கம்மி ஆயிடும். அதனாலேய பெண்களுக்கு துறவி என்ற ஒரு பதவியை ஒவ்வொரு மாதமும் கொடுத்து வைக்கல. (கிறுத்துவ கன்னியா பெண்களும், சமணம் பூண்ட மணிமேகளையும், சக்தி மார்க்கமும் விதிவிலக்குத்தான்)

இரண்டாவது முலாம் பூச்சா மறுபடியும் படிப்பு, பெரியவங் சொல்றத எதிர் கேள்வி கேட்காம கேட்டுகணும் என்ற ஒரு முலாம் பூச்சு மூலமா       ஆண்களுக்கு ஆர்வமும் கேள்வி கேட்குற மனபாண்மையும் மட்டுப்படுத்தப்படும். இதையும் தாண்டி குசும்பா கேட்கிற பசங்க இருக்கத்தான் செய்வாங்க. அப்படிதான் ஒரு நாள் என் நண்பன் இனப்பெருக்க அறிவவியல் பாடம் எடுக்கும் போது, 'அது எப்படி சார் இந்த விந்து போய் அந்த கருமுட்டையை சேரும்'ன்னு கேட்க அதெல்லாம் அப்படிதான் சேரும் அப்படின்னு சொல்லி அவசரமா பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாக வகுப்பு எடுத்தாங்க அந்த இனப்பெருக்க உயிரியல் வகுப்ப.

அப்ப அந்த கேள்விக்கான அர்த்தம் புரியல ஆனா இன்னைக்கு திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் அந்த கேள்விக்கான விடைகள் நம்மள சுத்தி இருந்துகிட்டே இருக்குனு யோசிக்கறேன். கோயில் உடைய சிற்பங்களைப் பார்க்கும் போது இல்லைன்னா இந்த சின்ன சின்ன உயிரினங்கள் உடைய இனச்சேர்க்கைய பார்க்கும்போது நமக்கு கண்டிப்பா அதற்கான விடை கிடைக்குது. இந்த உயிர்கள் நம்மள சுத்தி இருக்கிறது அவ்வளவு ஒரு நல்ல விஷயம் தான். பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்காத முடியாத விஷயங்களையும் இந்த சின்ன சின்ன உயிரினங்கள் எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்குது. பட்டாம்பூச்சியாய் இருந்தா கூட சரிதான் அதுங்க ஒன்னா சேர்ந்து பறக்கும்போது ஏன் அப்படி பறக்குதுன்ற கேள்வி கேக்க தோணும். அறிவியல் இந்த முலாம் பூச்ச சத்தமில்லாம உடைக்குது.

எப்படி நம்ம இந்தப் படிப்பு முலாம் பூச்சில் இருந்து வெளியே வரும்போது 14/16 தொட்டிடுறோம் அப்பவே நம்ம பருவ தனிமையும் சுட்டெரிக்க ஆரம்பிக்குது. பத்தாம் வகுப்பு முடித்த பிறகு ஏதோ கொம்பு முளைக்குதோ இல்லை, ஆணையும் பெண்ணையும் யோ இந்த பருவத் தனிமை  வாட்டதான் செய்யுது. இதற்கான விடையை நம்ம என்ன தான் கடவுள் கையில் தேடினாலும் சில நேரம் சக்தி கொடு என்று பாடினாலும் அந்த பெண்/ஆண் சக்தியை தான் நம்ம நாடி நிற்கிறோம் காதல் என்ற உணர்வ.! அவர்களுடைய கணிவு கொடுக்குற பேச்சா இருக்கட்டும் இல்ல ஒரு அங்கீகரிக்கிற பார்வையா இருக்கட்டும், அது ஒரு பசுமரத்து ஆணி போல நம்ம நெஞ்சில பதிய தான் செய்யுது.

சரி இந்த படிப்புகள் மூலம் பூச்ச தாண்டி நம்ம கொஞ்சம் மேல வந்து
அப்படியே காதல யோசிச்சி பார்க்கும்போது இந்த பொருளாதார தடை தான் வந்து நிக்கும்.  ஒரு பொண்ணை யோசிச்சு பார்க்கும்போதே
குறைஞ்சது 
அவளுக்குத் தேவையான விஷயத்த எல்லாம் அவனால வாங்க முடியுமானு? கேட்ட அந்த லிஸ்டு தான் வந்து நிக்கும்
அவளுக்கு நாப்கின் வாங்கி தரமுடியுமா ? 
(இயற்க்கைனாலும்  - முகம் சுளிக்கற கேள்வி தான் பொதுப்புத்தியோட ஆயுதம்)
அவளுக்கு நல்ல துணி வாங்கி தருவானா?
அவளுக்கு நல்ல சோறு நல்ல வீடு கொடுப்பானா?
அவளுக்கு பிரசவம்னா நல்ல ஹாஸ்பத்திரில சேப்பான ? இல்ல தர்மாஸ்பத்திரிலயா ?
இப்படி அடிப்படை தேவை அந்தஸ்து பத்தி ஆயிரம் பொதுக் கேள்வி வரும்.


இதெல்லாம் நம்ம தாண்டி வர காமமும் காதலும் பிறந்து இறந்து பல ஜென்மம் எடுத்து கடைசியில் கல்யாணம் என்ற பொது இடத்துக்கு வரும். சில நேரங்களில் காமமும் காதலும் கல்யாணமும் ஒரு சில பேருக்கு கைகூடிய வந்தாலும் பல பேருக்கு கை கூடுவதில்லை.

இந்த பருவ தனிமையை தணிக்க கடைசியா நம்ம கிட்ட இருக்க பிரம்மாஸ்திரம் என்னன்னா இந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதாவது காதலையும் காமத்தையும் அங்கீகரித்த கல்யாணம் என்ற பேக்கேஜ் தான் இதுல தான் எல்லாமே ஒன்னா இருக்கு. வெறும் காமம் காதல் மட்டும் இல்ல ஒருத்தரோட நட்போடு வாழ்நாள் முழுதும் பயணிக்கிற ஒரு விஷயமும். அந்த இருவரும் ஒரு கூட்டத்தோட வாழுற சமூக வாழ்வியலும் தான்.

அது மட்டுமா ஒரு பிள்ளையை பெற்று எடுக்கிறது அவங்களை வளர்த்தெடுக்கிறது, அந்த பிள்ளைகளால் வரும் சந்தோஷம்னு பல விஷயமும் இந்த பேக்கேஜ்லதான்.

இந்த கல்யாணம் என்ற பேக்கேஜில் ஏதாவது ஒண்ணு நினைச்சு மட்டுமே இங்க உள்ள வந்து இருந்தா அவங்களுக்கு கண்டிப்பா வலி தான் மிஞ்சும் . இதுல எல்லாத்தையுமே ஆல்ரவுண்டர் இருக்கலாம் இல்ல ஸ்பெஷலிஸ்ட் இருக்கலாம் ஆனா கண்டிப்பா குறைந்தபட்ச எல்லாத்தையும் தெரிஞ்சு இருக்கணும் பழகவும் செய்யணும் அது அவங்க ரெண்டு பேரோட விருப்பத்தோட.

No comments:

Post a Comment