Monday, October 21, 2024

கிழக்கு மேற்கு

source:Needpix.com
 
என்னதான் நம்மல சுத்தி அந்த விஷயம் இருந்தாலும் அதுபத்தி நெறைய யோசிக்கவே மாட்டோம். அது அப்படியேதான் இருக்கு அதுல என்ன 
அப்படின்னு எடுத்துப்போம். பொதுவா நம்ம எப்படி யோசிச்சி இருப்போம்னா ஒரு வீட்ல அம்மா வேலைக்கு போகாம இருந்தாங்கன்னா குழந்தைங்க யோசிக்காம அப்பா தான் வேலைக்கு போவாங்க அப்படின்னு அம்மா வீட்ட பாத்துப்பாங்க அப்படின்னு ஒரு அனுமானத்துக்கு வந்துருவாங்க திடீர்னு ஒருநாள் யாரோ ஒருத்தரோட அம்மா வேலைக்குப் போறத பாக்கும் போது அவங்களுக்கு அந்த ஒரு விஷயம் புரியும் அம்மாவும் வேலைக்கு போகலாம்னு.

இதுபோல சின்னச் சின்ன விஷயங்கள் சின்ன வயசிலே உடையது ஆனால் நம்மள சுத்தி இருக்கிற பல விஷயங்கள் இங்க என்னதான் பெரியவர்கள் ஆனாலும் உடையறது இல்லை.

அதைப்போலத்தான் ஆரம்பத்திலிருந்தே நாங்க படிச்ச இடத்துக்கு பேரு கீழ் படப்பை.! நிறைய பஸ் வேணும்னா நாங்க மெயின் பஸ் ஸ்டாண்டிற்கு மேல் படப்பைக்கு  போகணும். அது என்னமோ வசதி வேணும்னா கூட மேலைநாட்டுக்கு போறா போல எங்களுக்கு பஸ் வேணும்னாலும் அந்த மேல் படைப்பைக்கு போனா தான் பஸ்ல சீட்டு கிடைக்கும்.

இந்தக் கீழ் மேல் ன்ற அடை மொழியெல்லாம் பெருசா யோசிச்சதே இல்ல. கீழ்ப்பாக்கம் அப்படின்னாலே நமக்கு என்னவோ பைத்தியக்கார ஹாஸ்பிடல் தான் ஞாபகம் வருது. ஆனா மேல்பாக்கம்னு ஒண்ணு இருக்குமான்னுக்கூட யோசிக்கறது இல்ல.

முன்ன சொன்னது போல ஒருநாள் வேலைக்கு போயிட்டு இருக்கும்போது, வண்டலூர் கேளம்பாக்கம் ரோட்டுல திடீர்னு மேல்கோட்டையூர் வழியா கீழக்கோட்டையூர் நோக்கி நகரும்போது திடீர்னு ஒரு மேடுபள்ளம் வரும் அதுலயும் எதிர் வெயில் ஹெல்மெட்டுக்குள்ள கண்ணாடி வழியா எகிறி குதிச்சி மூக்க சூடேத்தி நம்மள சோதிக்கும்போது தான் மூளையும் சூடாகி வேலைய காட்டுச்சி 

அப்ப சேதுபதி எழுதின 'ஊரும் பெயரும்' என்ற புத்தகம் பெயர் எல்லாம் எனக்கு தெரியாது ஆனால் டென்ஷன் இல்லாம நிறைய யோசிக்க தான் தெரியும்

அப்படி யோசிக்கும் போதுதான் இந்த பேர் ஏதோ ஒன்னு நம்மள திசைகளை நோக்கி யோசிக்க வச்சிது. கிழக்கு நோக்கி இருக்கிறது எல்லாமே கீழ/கீழ், மேற்கு நோக்கி இருக்கிறது எல்லாமே மேல்/மேலனு இருக்கு. இது இன்னும் கொஞ்சம் ஆழமா பார்த்தோம்னா இதுநாள் வரைக்கும் திசைகள ஒரு இடுகுறிப் பெயரா யோசித்து இருந்த நாம அதையெல்லாம் இப்போ ஒரு காரணப் பெயரா யோசிக்க தோணுது.

வடக்கு-தெற்கு அப்படின்னு பார்க்கும்போது 
                திடீர்னு ஒருநாள் 'பியர் கிரில்ஸ்'ஓட 'Man vs Wild' நிகழ்ச்சியை பார்த்துட்டு இருந்தேன். 'நாங்க ஏன்டா நடு ராத்திரில அந்த காட்டுக்கு போக போறோம்'ன்ற போல தான் இருக்கும் அனாலும் அதை பாக்க, ஒரு அடிப்படையான விஷயத்தை கேட்கும் போது ஒரு அலாதி சந்தோஷம் எனக்கு. 
           அப்படி என்னனா வெட்ட வெளியில ஈரப்பதமான எந்த எடத்தலயும் இருக்க ஒரு கல்லுல பச்சை பாசி வளராத இடம் தான் வடக்கு...! அட! வடக்குல சூரியன் வராது அதனால பசய்யமும் இருக்காது.!

 'வடக்கிருந்து உயிர் விடுதல்'ன்ற சொல்லாடல் அருமையானது தான். இரும்பொறையும் பிசிராந்தையாரும் ஞாபகம் வந்தா சந்தோஷம் தான்.
 
இப்போ நம்ம திடீர்னு யோசிக்கும்போது இந்த திக்விஜயம் அப்படி என்ற ஒரு வார்த்தையும் நமக்கு யோசித்து பாக்கணும்.

அப்போ இது நாள் வரையும் இடுகுறிப்பெயரா யோசிச்சிட்டு வந்ததும் கிழக்கு-மேற்கு கொஞ்சம் பிரிச்சி பார்த்தோம்னா கீழ்த் திக்கு-மேல் திக்கு அப்படின்னு பார்த்தா கொஞ்சம் வித்தியாசமா இருக்கு இல்லையா..!

இது எல்லாமே என்னுடைய 'ஒருவேளை இப்படி இருக்குமோ?' அப்படி என்ற ஒரு யூகத்தின் அடிப்படையில் தான் கேட்கிறேன் இதனுடைய அடிநாதத்தை நான் இன்னும் தேடி பார்க்கல.
 
ஆனா கண்டிப்பா கீழ்த் திக்குனு யோசித்துப் பார்க்கும்போது தரை எப்பவுமே கடலைவிட மேல இருக்குது. கடல் கரையிலிருந்து பார்க்கும் போது கீழ இருக்குற திசையா தான் இருக்கும். அப்படின்னா கண்டிப்பா சூரியன் எல்லாருக்குமே கீழேதான் உதயமாகிறது குறைந்தது இந்த வங்காள விரிகுடாவின் கரைல இருக்க எல்லாருக்கும்.!

கொறஞ்சு இதெல்லாம் பாக்கும் போது 

கீழ் திக்கு - கிழக்கு

மேல் திக்கு - மேற்கு

வரா திக்கு - வடக்கு

னு யோசிக்க தோணுது. கிழக்குல இருக்க கோடில ஒரு பிஸுடோ சயின்ஸா கூட போகலாம் இல்ல மறைந்தும் ஆராயத உண்மையா இருக்கலாம். ஆதாரம் இல்லாத வரை வெறும் அனுமானம் தான். 

ஆனா இது என்றும் உண்மை தான் - 'கிழக்கு நோக்கி நிற்கின் இடக்கை வடக்கு' நான் கேட்ட தமிழ் அறிஞரின் சொல்லாடல்



 

No comments:

Post a Comment