ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்த பிறகு ஒரு நாள் என் நண்பனோட போயிட்டு இருக்கும்போது
என் நண்பன் "அந்த ஆள தெரியுமா" கேட்க
"என்னடா ஆச்சு?! தெரியாது" நான் சொல்ல
"அவன நல்லா பார்த்துக்கோ அவன்தான் போன வாரம் அந்த மெக்கானிக் பையன தலைய அறுத்து கொண்ண 3 பேர்ல இவனும் ஒருத்தன் இன்னைக்கு பெயில்ல வந்துட்டான்"
"என்னடா சொல்ற கொலை நடந்ததா" அப்படின்னு கேட்க
ஆமாடா தொழில் போட்டி தான் கொலைக்கு கரணம். அந்த பையன் மெயின் ரோட்ல ரோட்டுல மெக்கானிக் ஷாப் வெச்சிருந்தான் இவனுங்ககளோ உள் மெக்கானிக் ஷாப் வெச்சிருந்தாங்க, அந்த பையனுக்கு நெறைய வண்டி போறது பாத்து காண்டு ஆயிபோயி அந்த பையன மிரட்டி இருக்காங்க. அந்த பக்கம் வர வண்டிய நான் பாக்கல நீங்களே பாத்துக்கோங்க சொல்லிருக்கான்.
ஆனா ஒரு வாரம் கழிச்சு அதே ஆளுங்க அந்த பையன் அந்த பனைமரத்துக்குப் பக்கத்துல வச்சி தலையை துண்டாக்கிட்டு போயிட்டானுங்க. பணம் பண்ற தொழிலே எமன் ஆகிடுச்சு. பொழப்பு தேடி வெளியூர்ல வந்து திறமையா பொழச்சவன கொன்னுட்டாங்கனு சொல்ல
அதே இடத்தில் ஆறாவது படிக்கும்போது தொடைல தெருப்பா தெரிஞ்ச தடித்த முடியால அந்த பையன் பருவம் வந்துட்டான் நல்லா காமிச்சு கொடுத்துச்சி கொஞ்சம் அரும்பு மீசையும் தான். அதே பனமரத்த தாண்டி நகரும் போது அந்த பையன் சொன்ன வார்த்தை காதுல மறுபடியும் கேட்டுது
"பணம் ஒரு விலைமாது யார் திறமையா வலிமையா இருக்கானோ அவன் பின்னாடி போயிடும்"
ஏண்டா இப்படி சொல்ற வேணாண்டா சொன்னோம். அவனோட கோவத்திலும் வெறுப்பிலும் வந்த வார்த்தை தான் அது எங்களுக்கு புரிஞ்சுது.
"அவங்க பின்னாடி தான் எப்போதும் அந்த பணம் போது" அப்டின்னு உரக்க சொன்னான்.
அப்பாவால் கைவிடப்பட்ட அந்த பையனுக்கு வேற என்ன பண்றதுன்னு தெரியல வெகுளியான தங்கச்சி என்ன பண்றது தெரியாதா அம்மா இப்படி மூணு பேரும் தன்னுடைய பாட்டி வீட்டில அழையா விருந்தாளியாக இருந்தாங்க.
இப்படி கசப்பான சம்பவங்கள்னால பொதுவா பணம் பத்தி பல பிம்பம் இருக்குது. இப்படி பல பிம்பத்துக்கு நடுவுல நமக்கு நல்லது சொல்லித்தர அதே உலகம் பணத்தோட முக்கியத்துவத்தை சொல்லித்தர மறந்துடுது
பெருமான்மையா நம்ம கட்டமைப்பில் பணத்தை எப்பவும்
வில்லத்தனமாக பார்க்கிறது,
பணம் உடையவர்களுக்கு கருணை இருக்காது,
பணம் இருக்கிற திமுருல எல்லாம் செய்யறான்,
நாலு பேரு வயித்துல அடிச்சு வாங்குனது,
ஆனா கொஞ்சம் யோசிச்சி பார்த்தோம்னா பணம்ன்றது என்ன ?
நமது தேவைகளைப் பூர்த்தி செய்கிற உழைப்பின் ஒரு உத்திரவாதம்
நமக்கு தேவைக்கு பணம் இருந்தா போதும் அப்படி என்ற அளவுக்கு தான் யோசிக்கிறோம் ஆனால் தேவைன்றது என்னனே யோசிக்கிறது இல்லை பெரும்பாலும் தேவை என்று சொல்றது என்னனா
அடிப்படைத் தேவைகளை தான் - நல்ல நிலையான வருமானம் (வாழ்க்கை தரத்தை அப்படியே கொண்டு போக), நல்ல துணிமணி, ஒரு கல்யாணம் பண்ற அளவுக்கு தேவையான தொகையும் நகையும் , இதுக்கு நடுவுல இந்த விழா அந்த விழானு எந்த விழாவுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுனு பணத்தை பத்தியான தேவை சுருங்கி இருக்கு
இந்த சமுதாயத்தில் எந்த ஊர்ல பொருளை கொண்டு போனாலும், ஒரு ஆயிரம் பேர் சம்பந்தப்பட்டு இருப்பாங்க, அது அந்த ஊர் VAOலிருந்து அந்த கம்பெனி உடைய செக்யூரிட்டி இப்படி பல ஆயிரம் பேர் இந்த பொருளோட சம்மந்தப்படுறோம். இந்த பொருளோட விலையும் பணத்தோட மதிப்பும் நம்ம சமூக மனப்பாண்மை போல கட்டுக்கடங்காமலும் சில நேரங்கள்ல அடங்கி ஒடுங்கி புரிதலுக்கு அப்பாற்பட்டு இருக்கு
உண்ண உணவு
உடுக்க உடை
இருக்க இடம் நம்முடைய தேவை சுருங்கி இருக்கிறதில்ல
நம்ம குழந்தைகளுக்கான கல்வி-ன்ற இடத்திலேயே பல ஆயிரம் ரூபாய் கொடுத்து விடும் நிலை இருக்கு.
சரி அரசாங்க பள்ளியா இருந்தாலும் அரசாங்கத்திற்கு தேவையான பொருட்களை யார் உற்பத்தி பண்ற அந்த உற்பத்தி பண்ற பொருள்களுக்கான இடம் எங்கிருந்து வருது
நாம சாப்பிடுற சாப்பாட விளைவிக்கிற இடமும் உபகரணமும் நமக்கு தேவை இல்லையா
நம்மளுடைய கழிவுகளை சுத்திகரிக்கற இடமும் உபகரணங்களும் நமக்கு தேவை இல்லையா அந்த கல்வி கற்கிறோம் என்ற அந்த இடத்துக்கு அனைத்தையும் நமது தானே
அதேசமயம் நம்ம குழந்தைகள் விளையாட வேண்டிய இடத்துக்கான தேவை நமது தானே
இந்த மருத்துவமனையில் இருக்க ஒவ்வொரு ஒவ்வொரு உபகரணங்கள் அதை தயாரிக்கிற இடம் அந்த மருத்துவமனைக்கான இடம் அப்படின்னு பார்த்தோம்னா
இத்தனை விஷயத்துக்கும் நம்ம பணம் பண்ணனும் அதுமட்டுமா
குறைஞ்சது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போகறதுக்கு இன்னைக்கு எது வேணும்னாலும் ஒரு வண்டி தேவை இந்த வண்டி இது நம்ம யோசிக்கவே
நம்முடைய தேவைகள நம்ம உணரும்போது தான் பணம் பண்றதே எவ்வளவு முக்கியம்ன்னு யோசிக்க ஆரம்பிக்கறோம். அந்த பணத்தை எப்படி செய்யறது ?
ஒரு நல்ல விஷயம் என்னன்னா இங்க நம்ம ஏற்படுத்துகிற ஒரு பொருள் கோடிக்கணக்கான பேர் செய்ய முடியும் நீங்க அந்த கோடிக்கணக்கான விற்பனையில பத்து ரூபாயை லாபம் எடுத்து பங்கிட்டாலும் நம்ம குழுவோடு சம்பாதிக்க முடியும.
ஆனா யாருக்காக உழைக்கிறோம் எதுக்காக உழைக்கிறோம் என்ற கேள்வி யோசிக்க தான் வேணும்.
No comments:
Post a Comment