Tuesday, October 12, 2021

மதமும் நம் நம்பிக்கையும்

(Source: cute baby pictures blogspot)

நம்ம வீட்ல பொறந்த கொழந்த (குழந்தை) கை விரல் நீட்டி மடக்க தெரியாத போதே நாம சாமி கும்பிட (தொழுகை பண்ண, பிரார்த்தனை பண்ண ) வச்சிடறோம்.

    அதே 3 வயசு குழந்தை 'புக்க' மெரிச்சிட்டா முதல்ல நாம சொல்றது "சாமி டா (செல்லம்), புக்க மெரிக்க கூடாது சரியா...?" னு சொல்லி, அந்த புக்கோட  மதிப்ப உணர்த்தறோம். அந்த புக்கு, ஒருத்தரோட/பலரோட  உழைப்பில உருவானது அந்த உழைப்ப உணர்வ மதிக்கனும் னு சொன்னா  அந்த குழந்தைக்கும் புரியாது... அதனால அந்த புக்க நம்மலோட முழு பய பக்தி உணர்ச்சிய வெளிப்படுத்தி 'புக்க சாமினு' சொல்லி வைக்கறோம். 


    அப்டியே "உன்ன எப்படி அப்பா அம்மா பாத்துக்குறாங்களோ அப்படி தான், சாமி எல்லாரையும் காப்பாத்துவாங்க, ஆனா தப்பு பண்ணா தண்டனை கொடுப்பாங்க... சரியா?.  நீ தப்பு பண்ணாம இருக்கணும்" னு சொல்லி கடுவுள் மேல நம்பிக்கையும் பயத்தையும் சேத்தே உண்டாக்குறோம்.


இப்படி எல்லா மதத்துலையும் கடவுள் மேல நம்பிக்கை, பயம், எதிர்பார்ப்புனு பல உணர்வுகள தொடர்பு படுத்துறோம். அதே சமயம் மதம் தான் எந்த எந்த பழக்க வழக்கங்கள் சரி தப்புனு சொல்லி தருது.

  • 27 நட்சித்திரம் 12 ராசி பாத்து கல்யாணம் பண்ணனும்
  • வெள்ளி கிழமை வீட்ல வெளக்கேத்தனும் (பல்பு இருந்தாலும்..!)
  • செவ்வாய் வெள்ளி பெண்கள் தலை குளிக்கணும்
  • அமாவாசையில கறி மீன் முட்டை சாப்பிட கூடாது
  • புரட்டாசி மாசம் கறி மீன் முட்டை சாப்பிட கூடாது
  • ஆடி மாசம் கூழ் ஊத்தணும்
  • மார்கழி மாசம் அதி காலைல பெருமாள் வழி படனும்
  • கார்த்திகை மாசம் ஐயப்பன வழிபட்டா நல்லது
  • ஐப்பசில சிவனுக்கு  அன்னாபிஷேகம் பண்ணனும்
  • புரட்டாசி பெருமாள் கும்பிடனும் 
  • ஆவணி அவிட்டம் பூணூல் மாத்தணும் 
  • ஆடியில ஆத்தாவ கும்பிடனும் 
  • ஆடி கிருத்திகை முருகன் வழிபாடு  
  • ஆடி அமாவாசை திதி கொடுக்கணும் 
  • வைகாசி விசாகம் 
  • சித்ரா பௌர்ணமி 
  • பங்குனி உத்திரம் 
  • மாசி மகம் 
  • தை கிருத்திகை 
  • தை பூசம் 
  • தை வெள்ளி 
  • தை பொங்கல்
  • வெள்ளி கிழமை அம்மனுக்கு 
  • சனிக்கிழமை நவகிரக வழிபாடு
  • ஞாயிறு சூரியன் வழிபடு
  • திங்கள் சுக்ரன் வழிபாடு
  • செவ்வாய் கிழமை துர்க்கைக்கு இராகு கால வழிபாடு 
  • வியாழன் குரு பகவான்/ தக்ஷிணா மூர்த்தி/ சாய் பாபா வழிபாடு
  • பௌர்ணமி விசேஷம்
  • பிரதோஷம் 
  • சங்கடற சதுர்த்தி 
  • இராகு காலம், யம கண்டத்துல கிளம்பக்கூடாது நல்ல விஷயம் ஆரம்பிக்க கூடாது 
  • குளிகை, முகுர்த்தம், வாஸ்து நாள் பாத்து நல்லது பண்ணனும்
  • ஞாயிறு ஏசுக்கான நாள் கண்டிப்பா சர்ச்சுக்கு போகணும்
  • ஆறு வேளை தொழுகணும்
  • ஆண்கள் வெள்ளிக்கிழமை மசூதிக்கு போகணும்


மேல பாக்குற லிஸ்ட் ட்ரைலர் தான், ஒவ்வொரு சாதில, ஒவ்வொரு சாதி பிரிவுல, ஒவ்வொரு குடும்பத்துல இந்த விழாக்கள் கூடும் குறையும் ஆனா மதம் தான் நல்லது கெட்டத  மொத்ததுல முடிவு பண்ணுது.  

    இல்ல இல்ல அந்த மத நம்பிக்கையின் படி நடக்க சொல்றவங்க தான் அத தீர்மானிக்கிறாங்க. யாருடா அவங்கனு பாத்த... அப்பா அம்மா இல்ல கூட பொறந்தவங்க இல்லனா பக்கத்து வீட்டுல வயசுல மூத்தவங்க இல்ல அன்பானவங்கனு இருப்பாங்க.  மேல பாத்த பழக்க வழக்கம் எல்லாம் புக்ல எழுதி வச்சு வர்ரது இல்ல வாய்  வழி சேதியா கேட்டு நம்பி நாம நம்ம வழக்கத்துல கொண்டு வர்றோம்.


    வெளிச்சம் கொடுக்க பல்பு (ஸ்மார்ட்டா) இருந்தாலும் விளக்கு ஏத்தறதும்; பொணம் வைக்க பிரீசர் பாக்ஸ் கொண்டுபோக சொர்க ரதம் இருந்தாலும், பூ தூவி பாடையில பொணத்த எடுத்துட்டு போறது - மதம்,  நம்ம புத்திக்கு தெரியாம ஏழைக்கும் பணக்காரனுக்கும் படிச்சவனுக்கும் படிக்காதவனுக்கும் சமத்துவத்த கடைபிடிக்க வைக்குது. கோயிலுக்கு எல்லாரையும் குளிச்சிட்டு வர வைக்குது (தீண்டாமை சாபக்கேடு கண்டிப்பா இருக்கு)

    சாதிக்கு ஒரு சடங்கு ன்றது வேற விஷயம்... ஆனா மதம் கொறஞ்சது நம்மல ஒரு சின்ன பழக்கத்தால பிணைச்சு வைக்குது. அதனாலயே இந்த மத பழக்க வழக்கத்த நம்மலோட கொழந்தைக்கு சின்ன வயசுலயே சொல்லிக் கொடுத்து பழக்கி வச்சிடுறோம்.

    வாழ்க்கைல பிடிப்பு இல்லாம போகும் போது அந்த நிலையான மாற்றத்த கொண்ட சூரியனையும் நிலாவையும் நவகிருஹத்தையும் சார்ந்த மதத்தை கெட்டியமா பிடிச்சிக்கிறோம். வாழ்க்கைல பிடிப்பு இல்லாம போகக்கூடாதுனு சின்ன வயசுலயே மதம் சார்ந்த பழக்க வழக்கத்த கடைபிடிக்கிறோம்.


    வாழ்க்கைல நடக்குற ஒவ்வொரு மாற்றத்துக்கும் மதத்துல ஒரு சடங்கு இருக்கு அது காலையோ மாலையோ பௌர்ணமியோ அமாவாசையோ சூரிய கிரஹணமோ சந்திர கிரஹணமோ பெறப்போ வயசுக்கு வர்றதோ கரு உருவாகிறதோ இல்ல இறப்போ எதுவானாலும் அது மதத்தோட சடங்காயிடுது.

எல்லா மதத்துலயும் இப்படிப்பட்ட சடங்குகள் இருக்கு.

கண்டிப்பா மதம் நம்மல இணைக்குது ஆனா நம்மோளோட போட்டியிடும் குணம் நம்மள புது புது கடவுள் உருவாக்குது புது புது சாங்கியத்த உருவாக்குது. சிலருக்கு கட்டுப்படியாகாத சடங்காவும் மாறுது நம்ம மதம். 

 


No comments:

Post a Comment