ரொம்ப நாள் கழிச்சு அந்த மிஸ்ஸ/டீச்சரா பாக்க போறோம்னு நானும் என் நண்பனும் பைக் எடுக்கிட்டு கைல பத்திரிக்கையும் வச்சிக்கிட்டு கிளம்புனோம். ஒரு வழியா அவங்க வீட கண்டு பிடிச்சு, கேட் கதவ தட்டிட்டு, அவங்க முகம் தெரியுமான்னு காத்திருந்தோம். பக்கத்து வீடுகள நோட்டம் விட்டு முடிக்றதுக்குள்ள கதவு திறக்க 'வாங்க வாங்க' ன்ற பரிட்சயமான குரலும் கேட்டது. நாங்களும் உள்ள போய் அவங்க கை காட்டின சோபால உட்கார்ந்தோம். டீ குடிச்சிகிட்டே நலம் விசாரிச்சோம், அப்டியே எங்க வீட்டு நிகழ்ச்சிக்கு அவங்க கண்டிப்பா வரனமுன்னு பத்திரிக்கைய குடுக்க அவங்களும் வாங்கினாங்க.
அப்டியே கடந்த கால பள்ளி நினைவ அசைபோட்டு மற்றவங்கள பத்தி விசாரிக்க ஆரம்பிக்க ஒரு மாற்று திறன் கொண்டவங்கள பத்தி பேசினோம். தீடிர்னு 'மாற்று திறனாளிலாம் கொஞ்சம் கர்வம் கொண்டவங்க, மத்தவங்க இரக்க படுறத அவங்க ஏத்துக்க மாட்டாங்க இல்லையா' சொல்ல என் நம்பனும் 'ஆமாம் அப்டித்தான் அவங்க' சொன்னான். 'ஆனா அப்படியில்லையே...' னு நான் சொல்றதுக்கு முன்னாடி 'இல்ல இல்ல அப்டித்தான் கொஞ்சம் அவங்களுக்கு கர்வம் அதிகம்' சொன்னாங்க. நான் என்ன திருப்பி சொல்றதுன்னு தெரியாம யோசிக்க.. அந்த பேச்ச விட்டு வேற விஷயத்துக்கு போயிட்டோம்.
என்னடா ராமாயணம் மகாபாரதம் பத்தி சொல்லிக்கொடுத்த அந்த மிஸ் இப்படி சொல்லிடாங்களேனு கொஞ்சம் ஏமாற்றத்தோடு கிளம்புனேன்.
அப்புறமா அந்த சம்பவத்தை அடிக்கடி யோசிக்க ஆரம்பிச்சேன். 'பெங்களூர் டேஸ்' படம் பாக்கும்போது கூட இந்த சம்பவம் தான் பின்னாடி ஓடும். அப்டியே 'மொழி' படமும் வந்துட்டு போகும்.
மகாபாரதம் சீரியல் பாக்கும்போது தான், அந்த குருஷேத்திர போருக்கு காரணமான சகுனி திட்டமிட்டு தான் மாற்று திறனாளியா (சகுனி தந்தையால்) ஆக்கப்பட்டார்னு தெரியுது. ஆனா பொதுவா நாம பாக்குறது என்னவோ மாற்று திறனாளியான சகுனி 'கெட்ட எண்ணம் கொண்டவன்', 'நயவஞ்சகன்', 'குடி கெடுப்பவன்'.
என்னடா மஹாபாரத கதையில (இதிகாசத்துல) இப்படின்னா ராமாயணத்துல கூட திருப்பு முனையா அமையருது கூனி சொன்ன யோசனை தான். ராமன் மேல பாசம இருக்க கைகேயி கூட கூனியின் பேச்சால் தான் வனவாசம் அனுப்பறதா நம்புறோம்.
நம்ம மனசுல இராமன்-இராவணன், பாண்டவர்-கௌரவர்கள் போல நல்ல நிக்குற ஆட்கள் சகுனி-கூனி. இன்னமும், தாய் மாமா எதாவது சொல்லி அது பங்காளி (ஒரு தாய் பிள்ளையானலும்) சண்டையாச்சுனா உடனே அந்த தாய் மாமானுக்கு கொடுக்கற பேரு 'சகுனி'தான். அதுவே ஒரு பெண் பேசி அந்த வீடு பிரியற நிலைமைக்கு வந்தா 'இந்த வீட்டுக்குனே கூனி இருக்காளே'னு வசை பாடுறது இன்னமும் இருக்கு. சகுனி-கூனி யோட மனுசுல நிக்கிறது இன்னொன்னு என்னனா ரெண்டு பேருமே உருவத்துல மாறுபட்டவங்க..!
உருவத்துல மாறுபட்டவங்கள பாக்கும்போது நமுக்கு முதல்ல தோணுறது இவங்க எப்படி வாழுறாங்க எவ்ளோ கஷ்டம். 'ஐயோ இவங்க எப்படி இருக்காங்களோ' பரிதாபம் தான். ஏன்னா நம்மள விட திறமை குறைவா இருந்தா அவங்க மேல கருணையும்(இல்ல எரிச்சல்) திறமை அதிகமா இருக்கவங்க மேல மரியாதையும் (சில நேரங்களில் பயமும்) ஏற்படுறது இயல்பானது. அத தாண்டி இவங்க, மாற்று திறனாளிகள் (திறமை அதிகமோ/குறைவோ)! எப்படி இருக்காங்க இல்ல தினசரி வாழ்க்கை எப்படி இருக்கும்ன்ற ஓர் ஆர்வம் எப்பவும் இருக்கும். பொதுவா மாற்று திறனாளிகள் பத்தி ஆச்சர்யமோ/வியப்போ இருக்கு.
கொஞ்சம் யோசிச்சு பாத்தா, நமக்கே நம்ம மேல வேற யாராவது கருணை காட்டினா பல நேரத்துல பிடிக்கிறது இல்ல. நம்ம தன்னிச்சையா இயங்கணும்னு ஆச படுறோம்! நானும் உன்ன போல சராசரி ஆளுனு நினைக்கிறோம் அப்டியே செயல் படுறோம். ஆனா பல விஷயத்துல நம்மால 'இவ்வளோ தான்' முடியும் நினைக்கிறோம் மத்தவங்க உதவியும் வாங்குறோம். சரி ஒரு கொழந்தையா எடுத்துப்போம் ஒரு சூழல் வரைக்கும் அப்பா அம்மா கை பிடிச்சி நடப்பாங்க அப்புறம் வலிய பிடிச்சாலும் கைய உதறிட்டு நடப்பாங்க, ஒரு கட்டத்துல வெளிய போக கூட தன் நண்பனோடு /நானே போறேன் - அப்பா அம்மா வேண்டாம்னு சொல்வாங்க, அவங்க வாழ்க்கை முடிவை அவங்களே எடுப்பாங்க. இத மீறி அப்பா அம்மா ஏதாவது மாற நடந்த/ அதீத அக்கறை காட்டினாவோ "என்ன இன்னும் சின்ன குழந்தையா நடத்தாத"னு சண்டையே நடக்கும். சில நேரத்துல குளிர்கால போரே நடக்கும்.
ஒரு சின்ன கொழந்தையே கை உதறிட்டு தானா நடக்கணும் நினைக்கும் பொது வளர்ந்த/வளரும் மாற்று திறனாளிகள் வேற யார் தயவு/கருணைல வாழாமா தானே வாழணும்னு நினைக்கிறது சரிதானே. சில நேரத்துல கருணையோடு மாற்று திறனாளிக்கு உதவும் போது நாங்களா எங்க பிரிச்சனையா பத்துக்குறோம்னு அந்த உதவிய மறுக்கும் போது உதவ நினைக்கிறவங்க மனசுல உணர்ச்சி சலனம் ஏற்படுது. இந்த உணர்ச்சி சலனம் பல நேரத்துல வசை மாரியா பொழியுது கர்வம் பிடிச்சவ/திமிரு பிடிச்சவ. இதுல இதிகாசத்த சேத்துப்போம் (சகுனி/கூனி னு).
மாற்று திறன் உடையவர்களை சராசரி ஆக்க உதவுற பரஒலிம்பிக்ஸ் ஓர் அற்புத நிகழ்வு. மாற்று திறனாளிகள அனைத்து உணர்ச்சியும் உள்ள சராசரி சக மனுஷர்களா அணுகுவோம். எல்லாருமே இங்க ஒரு விதமான தடைய மீறி முன்னேறுறோம்.
No comments:
Post a Comment