Saturday, September 21, 2024

காந்தியும் டிஷ்வாஷரும்


                                       
source: openaiart 

                                ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில "ஸ்கூலுக்கு போறப்ப சாமி கும்பிட்டுட்டு போடா", "ஸ்கூல் முதல் நாள் போறப்ப நல்ல நேரம் பார்த்து போடா" ன்னு  சொல்ற குடும்பத்தில பொறந்த பையனுக்கு இருக்கிற பெரிய பயம் என்னன்னா... எப்படியாவது தன் சொந்த முயற்சியால வேலை கிடைக்கணும்னுறது. 
 
                                  அப்படி வேகமா வேலை கிடைக்கலனா... உடனே அம்மா தனக்கு தெரிஞ்ச ஜோசியரிடம் இல்லனா தன்னுடைய அக்கா தங்கச்சி நல்ல ஜோசியர்னு  யார் சொல்றாங்களோ.! அந்த ஜோசியர் கிட்டே போய் ஒரு தாயத்து வாங்கி வாங்கிட்டு வந்து கட்டிவிட்றுவாங்க அப்ப அந்த தாயத்து கட்டி நமக்கு கொஞ்சம் மாசத்திலே வேலை கிடைச்சிருச்சு னா அந்த ஜோசியர்னால தான் இந்த வேலை கிடைச்சிடுச்சுன்னு சொல்லி  சொல்லியே அம்மா அந்த ஜோசியருக்கு பிராண்ட் அம்பாசிடரா மாறிவடுவாங்க.!  அப்படி மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.! ஒருவேளை படிச்சு முடிச்ச பிறகு நாலு மாசமா 'பீஃபா' வீடியோகேம் விளையாடுதுனால, எனக்கு தாயத்து கட்டி விடலையோ..! சரி 16 வருஷ படிப்புக்கு 4 மாசம் லீவு நமுக்கும் வேணும் தானே..!

ஆனா இந்த தாயத்து கட்டிறதுக்கு முன்னாடி 10 வருஷம் படிச்சதுக்கு கிடைச்சதாவோ இல்ல கொறஞ்சது 10 லிருந்து 50 ரெஸ்யூம் கொடுத்து இன்டெர்வியூக்கு போனதுக்காக வேலை கிடைச்சதுனு சொன்னா அது நம்ம மனசுக்கு ஆறுதலா இருந்திருக்கும்... ஆனால் தாயத்தால வேலை கெடச்சதின்னு  சொல்லும்போதுதான் நம்ம மனசுக்கு வருத்தமா இருக்கு.
 
அது என்னவோ அதே குடும்பத்தில் அக்காக்கோ  தங்கச்சிக்கோ வேலை கிடைக்கலனா முயற்சி பண்ணினா வேலை கிடைச்சுடும்னு சொல்லி ஆறுதல் சொல்றவங்க கொஞ்ச வருஷத்துல, வேலை கிடைக்கிதோ இல்லையோ தாயத்து கட்றாங்களோ  இல்லையோ ஒரு மாப்பிள்ளை பார்த்து கட்டிடணும்னு முடிவு பண்ணிடுறாங்க. இந்த தாயத்துக் கட்டிக்கொண்டு வேலைக்கு போகணும் என்ற கட்டாயம் எல்லாம் ஆண்களுக்கும் வேலை கிடைக்கலன்னா (/கெடச்சாலும்) சீக்கிரமா கல்யாணம் கட்டிக்கணும் கட்டாயம் பெண்களுக்கு இருக்கத்தான் செய்யுது.

கல்யாணம் பண்ணனும்னு பேச்சு எடுக்கும் போது தான்... நம்ம சுத்தி இருக்கிறவங்களோடு 'பெண் கல்வி', 'பெண் வேலை'ன்ற யோசனை அப்பட்டமா தெரியுது. பெரும்பாலும் இவங்க சொல்றது எல்லாம் 'பெண் கல்யாணம் ஆன பிறகு பெண்கள் தங்களுடைய வேலையை விட்டுடுவாங்க', 'பெண் சம்பாதியம்  வீட்டோட மேல் வருமானம்', 'பெண்கல்வி ஒரு பாதுகாப்பு மட்டும்'தான்ற நினைப்பு இருக்கத்தான் செய்யுது. பொதுவெளியில பெண் கல்வி, பெண்ணின் வேலை, பெண்ணின் பொருளாதார சுயச்சார்பு பத்தி பரவலா பேசினாலும்  நடைமுறைல கொண்டுவரதுக்கு நெறைய மெனக்கெட வேண்டியிருக்கு.

இப்படிப்பட்ட செயல் மற்றும் எண்ணங்களை பின்னணியில் என்ன இருக்கும் யோசிச்சு பார்த்தா நம்ம வீட்ட பாத்துகிறது, சமையல் செய்யறது குழந்தைகள கவனிச்சிக்கிறதுனு பலவித பொறுப்ப பெண்கள்தான் பாத்துக்கிட்டாங்க-பாத்துக்கிறாங்க. கழுதைப்புலி, கடல்குதிரை போன்ற உயிரினங்கள யோசிச்சு பாத்தா சமூக மாற்றம் வருமோ என்னவோ!

இந்த வீட்டு வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும்னு  சிக்கி தவிகரத்திலிருந்து பெண்களை கணவனோ, மாமியாரோ இல்ல அந்த குடும்பமோ விடுதலை செய்யுதோ இல்லையோ மிக்ஸி கிரைண்டர், பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிஸ்வாஷேர், கிளீனர் ரோபோ போன்ற கண்டுபிடிக்கிறதுதான் திரும்பத் திரும்ப அதே வேலையை செய்யற கட்டாயத்தில் இருந்து விடுதலை செஞ்சியிருக்கு.
 
பெண்கள மட்டும் விடுதலை செய்யல!  பெண்ணை சரிசமமா நடத்த நினைக்கிற நடத்துற ஆண்களையும் "நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரியா" ன்ற வசனத்திலிருந்தும் விடுதலை செஞ்சியிருக்கு.
 
தான் வேலைய தானே செஞ்சுகிட்டா! யாரும் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டாம் என்று காந்தி முறை தான் ஞாபகம் வருது 
 
 

No comments:

Post a Comment