Friday, October 29, 2021

சகுனியும் பாராஒலிம்பிக்ஸ்சும்


ரொம்ப நாள் கழிச்சு அந்த மிஸ்ஸ/டீச்சரா பாக்க போறோம்னு நானும் என் நண்பனும் பைக் எடுக்கிட்டு கைல பத்திரிக்கையும் வச்சிக்கிட்டு கிளம்புனோம். ஒரு வழியா அவங்க வீட கண்டு பிடிச்சு, கேட் கதவ தட்டிட்டு, அவங்க முகம் தெரியுமான்னு காத்திருந்தோம். பக்கத்து வீடுகள நோட்டம் விட்டு முடிக்றதுக்குள்ள கதவு  திறக்க 'வாங்க வாங்க' ன்ற பரிட்சயமான குரலும் கேட்டது. நாங்களும் உள்ள போய் அவங்க கை காட்டின சோபால உட்கார்ந்தோம். டீ  குடிச்சிகிட்டே நலம் விசாரிச்சோம், அப்டியே எங்க வீட்டு நிகழ்ச்சிக்கு அவங்க கண்டிப்பா வரனமுன்னு பத்திரிக்கைய குடுக்க அவங்களும் வாங்கினாங்க. 

அப்டியே கடந்த கால பள்ளி நினைவ அசைபோட்டு மற்றவங்கள பத்தி விசாரிக்க ஆரம்பிக்க ஒரு மாற்று திறன் கொண்டவங்கள பத்தி பேசினோம். தீடிர்னு 'மாற்று திறனாளிலாம் கொஞ்சம் கர்வம் கொண்டவங்க, மத்தவங்க இரக்க படுறத அவங்க ஏத்துக்க மாட்டாங்க இல்லையா' சொல்ல என் நம்பனும் 'ஆமாம் அப்டித்தான் அவங்க' சொன்னான். 'ஆனா அப்படியில்லையே...' னு நான் சொல்றதுக்கு முன்னாடி 'இல்ல இல்ல அப்டித்தான் கொஞ்சம் அவங்களுக்கு கர்வம் அதிகம்' சொன்னாங்க. நான் என்ன திருப்பி சொல்றதுன்னு தெரியாம யோசிக்க.. அந்த பேச்ச விட்டு வேற விஷயத்துக்கு போயிட்டோம்.

என்னடா ராமாயணம் மகாபாரதம் பத்தி சொல்லிக்கொடுத்த அந்த மிஸ் இப்படி சொல்லிடாங்களேனு கொஞ்சம் ஏமாற்றத்தோடு கிளம்புனேன்.  

    அப்புறமா அந்த சம்பவத்தை அடிக்கடி யோசிக்க ஆரம்பிச்சேன். 'பெங்களூர் டேஸ்' படம் பாக்கும்போது கூட இந்த சம்பவம் தான் பின்னாடி ஓடும். அப்டியே 'மொழி' படமும் வந்துட்டு போகும்.


மகாபாரதம் சீரியல் பாக்கும்போது தான், அந்த குருஷேத்திர போருக்கு காரணமான சகுனி திட்டமிட்டு தான் மாற்று திறனாளியா (சகுனி தந்தையால்) ஆக்கப்பட்டார்னு தெரியுது. ஆனா பொதுவா நாம பாக்குறது என்னவோ மாற்று திறனாளியான சகுனி 'கெட்ட எண்ணம் கொண்டவன்', 'நயவஞ்சகன்', 'குடி கெடுப்பவன்'. 

    என்னடா மஹாபாரத கதையில (இதிகாசத்துல) இப்படின்னா ராமாயணத்துல கூட திருப்பு முனையா அமையருது கூனி சொன்ன யோசனை தான். ராமன் மேல பாசம இருக்க கைகேயி கூட  கூனியின் பேச்சால் தான் வனவாசம் அனுப்பறதா நம்புறோம்.

    நம்ம மனசுல இராமன்-இராவணன், பாண்டவர்-கௌரவர்கள் போல நல்ல நிக்குற ஆட்கள் சகுனி-கூனி. இன்னமும், தாய் மாமா எதாவது சொல்லி அது பங்காளி (ஒரு தாய் பிள்ளையானலும்) சண்டையாச்சுனா உடனே அந்த தாய் மாமானுக்கு கொடுக்கற பேரு 'சகுனி'தான். அதுவே ஒரு பெண் பேசி அந்த வீடு பிரியற நிலைமைக்கு வந்தா  'இந்த வீட்டுக்குனே கூனி இருக்காளே'னு வசை பாடுறது இன்னமும் இருக்கு. சகுனி-கூனி யோட மனுசுல நிக்கிறது இன்னொன்னு என்னனா ரெண்டு பேருமே உருவத்துல மாறுபட்டவங்க..! 

    உருவத்துல மாறுபட்டவங்கள பாக்கும்போது நமுக்கு முதல்ல தோணுறது இவங்க எப்படி வாழுறாங்க எவ்ளோ கஷ்டம். 'ஐயோ இவங்க எப்படி இருக்காங்களோ' பரிதாபம் தான். ஏன்னா நம்மள விட திறமை குறைவா இருந்தா அவங்க மேல கருணையும்(இல்ல எரிச்சல்) திறமை அதிகமா இருக்கவங்க மேல மரியாதையும் (சில நேரங்களில் பயமும்) ஏற்படுறது இயல்பானது. அத தாண்டி இவங்க, மாற்று திறனாளிகள் (திறமை அதிகமோ/குறைவோ)! எப்படி இருக்காங்க இல்ல தினசரி வாழ்க்கை எப்படி இருக்கும்ன்ற ஓர் ஆர்வம் எப்பவும் இருக்கும். பொதுவா மாற்று திறனாளிகள் பத்தி ஆச்சர்யமோ/வியப்போ இருக்கு. 

    கொஞ்சம் யோசிச்சு பாத்தா, நமக்கே நம்ம மேல வேற யாராவது கருணை காட்டினா  பல நேரத்துல பிடிக்கிறது இல்ல. நம்ம தன்னிச்சையா இயங்கணும்னு ஆச படுறோம்! நானும் உன்ன போல சராசரி ஆளுனு நினைக்கிறோம் அப்டியே செயல் படுறோம். ஆனா பல விஷயத்துல நம்மால 'இவ்வளோ தான்' முடியும் நினைக்கிறோம் மத்தவங்க உதவியும் வாங்குறோம்.  சரி ஒரு கொழந்தையா எடுத்துப்போம் ஒரு சூழல் வரைக்கும் அப்பா அம்மா கை பிடிச்சி நடப்பாங்க அப்புறம் வலிய பிடிச்சாலும் கைய உதறிட்டு நடப்பாங்க, ஒரு கட்டத்துல வெளிய போக கூட தன் நண்பனோடு /நானே போறேன் - அப்பா அம்மா வேண்டாம்னு சொல்வாங்க, அவங்க வாழ்க்கை முடிவை அவங்களே எடுப்பாங்க. இத மீறி அப்பா அம்மா ஏதாவது மாற நடந்த/ அதீத அக்கறை காட்டினாவோ "என்ன இன்னும் சின்ன குழந்தையா நடத்தாத"னு சண்டையே நடக்கும். சில நேரத்துல குளிர்கால போரே நடக்கும்.

    ஒரு சின்ன கொழந்தையே கை உதறிட்டு தானா நடக்கணும் நினைக்கும் பொது வளர்ந்த/வளரும் மாற்று திறனாளிகள் வேற யார் தயவு/கருணைல வாழாமா தானே வாழணும்னு நினைக்கிறது சரிதானே. சில நேரத்துல கருணையோடு மாற்று திறனாளிக்கு உதவும் போது நாங்களா எங்க பிரிச்சனையா பத்துக்குறோம்னு அந்த உதவிய மறுக்கும் போது உதவ நினைக்கிறவங்க மனசுல உணர்ச்சி சலனம் ஏற்படுது. இந்த உணர்ச்சி சலனம் பல நேரத்துல வசை மாரியா பொழியுது கர்வம் பிடிச்சவ/திமிரு பிடிச்சவ. இதுல இதிகாசத்த சேத்துப்போம் (சகுனி/கூனி னு). 


மாற்று திறன் உடையவர்களை சராசரி ஆக்க உதவுற பரஒலிம்பிக்ஸ் ஓர் அற்புத நிகழ்வு. மாற்று திறனாளிகள அனைத்து உணர்ச்சியும் உள்ள சராசரி சக மனுஷர்களா அணுகுவோம். எல்லாருமே இங்க ஒரு விதமான தடைய மீறி முன்னேறுறோம்.

Tuesday, October 12, 2021

மதமும் நம் நம்பிக்கையும்

(Source: cute baby pictures blogspot)

நம்ம வீட்ல பொறந்த கொழந்த (குழந்தை) கை விரல் நீட்டி மடக்க தெரியாத போதே நாம சாமி கும்பிட (தொழுகை பண்ண, பிரார்த்தனை பண்ண ) வச்சிடறோம்.

    அதே 3 வயசு குழந்தை 'புக்க' மெரிச்சிட்டா முதல்ல நாம சொல்றது "சாமி டா (செல்லம்), புக்க மெரிக்க கூடாது சரியா...?" னு சொல்லி, அந்த புக்கோட  மதிப்ப உணர்த்தறோம். அந்த புக்கு, ஒருத்தரோட/பலரோட  உழைப்பில உருவானது அந்த உழைப்ப உணர்வ மதிக்கனும் னு சொன்னா  அந்த குழந்தைக்கும் புரியாது... அதனால அந்த புக்க நம்மலோட முழு பய பக்தி உணர்ச்சிய வெளிப்படுத்தி 'புக்க சாமினு' சொல்லி வைக்கறோம். 


    அப்டியே "உன்ன எப்படி அப்பா அம்மா பாத்துக்குறாங்களோ அப்படி தான், சாமி எல்லாரையும் காப்பாத்துவாங்க, ஆனா தப்பு பண்ணா தண்டனை கொடுப்பாங்க... சரியா?.  நீ தப்பு பண்ணாம இருக்கணும்" னு சொல்லி கடுவுள் மேல நம்பிக்கையும் பயத்தையும் சேத்தே உண்டாக்குறோம்.


இப்படி எல்லா மதத்துலையும் கடவுள் மேல நம்பிக்கை, பயம், எதிர்பார்ப்புனு பல உணர்வுகள தொடர்பு படுத்துறோம். அதே சமயம் மதம் தான் எந்த எந்த பழக்க வழக்கங்கள் சரி தப்புனு சொல்லி தருது.

  • 27 நட்சித்திரம் 12 ராசி பாத்து கல்யாணம் பண்ணனும்
  • வெள்ளி கிழமை வீட்ல வெளக்கேத்தனும் (பல்பு இருந்தாலும்..!)
  • செவ்வாய் வெள்ளி பெண்கள் தலை குளிக்கணும்
  • அமாவாசையில கறி மீன் முட்டை சாப்பிட கூடாது
  • புரட்டாசி மாசம் கறி மீன் முட்டை சாப்பிட கூடாது
  • ஆடி மாசம் கூழ் ஊத்தணும்
  • மார்கழி மாசம் அதி காலைல பெருமாள் வழி படனும்
  • கார்த்திகை மாசம் ஐயப்பன வழிபட்டா நல்லது
  • ஐப்பசில சிவனுக்கு  அன்னாபிஷேகம் பண்ணனும்
  • புரட்டாசி பெருமாள் கும்பிடனும் 
  • ஆவணி அவிட்டம் பூணூல் மாத்தணும் 
  • ஆடியில ஆத்தாவ கும்பிடனும் 
  • ஆடி கிருத்திகை முருகன் வழிபாடு  
  • ஆடி அமாவாசை திதி கொடுக்கணும் 
  • வைகாசி விசாகம் 
  • சித்ரா பௌர்ணமி 
  • பங்குனி உத்திரம் 
  • மாசி மகம் 
  • தை கிருத்திகை 
  • தை பூசம் 
  • தை வெள்ளி 
  • தை பொங்கல்
  • வெள்ளி கிழமை அம்மனுக்கு 
  • சனிக்கிழமை நவகிரக வழிபாடு
  • ஞாயிறு சூரியன் வழிபடு
  • திங்கள் சுக்ரன் வழிபாடு
  • செவ்வாய் கிழமை துர்க்கைக்கு இராகு கால வழிபாடு 
  • வியாழன் குரு பகவான்/ தக்ஷிணா மூர்த்தி/ சாய் பாபா வழிபாடு
  • பௌர்ணமி விசேஷம்
  • பிரதோஷம் 
  • சங்கடற சதுர்த்தி 
  • இராகு காலம், யம கண்டத்துல கிளம்பக்கூடாது நல்ல விஷயம் ஆரம்பிக்க கூடாது 
  • குளிகை, முகுர்த்தம், வாஸ்து நாள் பாத்து நல்லது பண்ணனும்
  • ஞாயிறு ஏசுக்கான நாள் கண்டிப்பா சர்ச்சுக்கு போகணும்
  • ஆறு வேளை தொழுகணும்
  • ஆண்கள் வெள்ளிக்கிழமை மசூதிக்கு போகணும்


மேல பாக்குற லிஸ்ட் ட்ரைலர் தான், ஒவ்வொரு சாதில, ஒவ்வொரு சாதி பிரிவுல, ஒவ்வொரு குடும்பத்துல இந்த விழாக்கள் கூடும் குறையும் ஆனா மதம் தான் நல்லது கெட்டத  மொத்ததுல முடிவு பண்ணுது.  

    இல்ல இல்ல அந்த மத நம்பிக்கையின் படி நடக்க சொல்றவங்க தான் அத தீர்மானிக்கிறாங்க. யாருடா அவங்கனு பாத்த... அப்பா அம்மா இல்ல கூட பொறந்தவங்க இல்லனா பக்கத்து வீட்டுல வயசுல மூத்தவங்க இல்ல அன்பானவங்கனு இருப்பாங்க.  மேல பாத்த பழக்க வழக்கம் எல்லாம் புக்ல எழுதி வச்சு வர்ரது இல்ல வாய்  வழி சேதியா கேட்டு நம்பி நாம நம்ம வழக்கத்துல கொண்டு வர்றோம்.


    வெளிச்சம் கொடுக்க பல்பு (ஸ்மார்ட்டா) இருந்தாலும் விளக்கு ஏத்தறதும்; பொணம் வைக்க பிரீசர் பாக்ஸ் கொண்டுபோக சொர்க ரதம் இருந்தாலும், பூ தூவி பாடையில பொணத்த எடுத்துட்டு போறது - மதம்,  நம்ம புத்திக்கு தெரியாம ஏழைக்கும் பணக்காரனுக்கும் படிச்சவனுக்கும் படிக்காதவனுக்கும் சமத்துவத்த கடைபிடிக்க வைக்குது. கோயிலுக்கு எல்லாரையும் குளிச்சிட்டு வர வைக்குது (தீண்டாமை சாபக்கேடு கண்டிப்பா இருக்கு)

    சாதிக்கு ஒரு சடங்கு ன்றது வேற விஷயம்... ஆனா மதம் கொறஞ்சது நம்மல ஒரு சின்ன பழக்கத்தால பிணைச்சு வைக்குது. அதனாலயே இந்த மத பழக்க வழக்கத்த நம்மலோட கொழந்தைக்கு சின்ன வயசுலயே சொல்லிக் கொடுத்து பழக்கி வச்சிடுறோம்.

    வாழ்க்கைல பிடிப்பு இல்லாம போகும் போது அந்த நிலையான மாற்றத்த கொண்ட சூரியனையும் நிலாவையும் நவகிருஹத்தையும் சார்ந்த மதத்தை கெட்டியமா பிடிச்சிக்கிறோம். வாழ்க்கைல பிடிப்பு இல்லாம போகக்கூடாதுனு சின்ன வயசுலயே மதம் சார்ந்த பழக்க வழக்கத்த கடைபிடிக்கிறோம்.


    வாழ்க்கைல நடக்குற ஒவ்வொரு மாற்றத்துக்கும் மதத்துல ஒரு சடங்கு இருக்கு அது காலையோ மாலையோ பௌர்ணமியோ அமாவாசையோ சூரிய கிரஹணமோ சந்திர கிரஹணமோ பெறப்போ வயசுக்கு வர்றதோ கரு உருவாகிறதோ இல்ல இறப்போ எதுவானாலும் அது மதத்தோட சடங்காயிடுது.

எல்லா மதத்துலயும் இப்படிப்பட்ட சடங்குகள் இருக்கு.

கண்டிப்பா மதம் நம்மல இணைக்குது ஆனா நம்மோளோட போட்டியிடும் குணம் நம்மள புது புது கடவுள் உருவாக்குது புது புது சாங்கியத்த உருவாக்குது. சிலருக்கு கட்டுப்படியாகாத சடங்காவும் மாறுது நம்ம மதம். 

 


Thursday, August 26, 2021

கருப்பும் பயமும்

கிட்ட திட்ட இருபத்தியெட்டு (28) வயசுல ஊரே கொண்டாடுற அந்த கங்கை அம்மனுக்கு (கிடாய் வெட்டி) கூழு ஊத்தும் விசேஷத்துக்கு போயிருந்தேன். 

என்னதான் 

கிழக்குல துலக்கானத்தம்மண் மேற்குல ஏரி கரை அம்மன் 

தெற்குல செங்கழனியம்மன் வடக்குல நல்லாட்சியம்முனு 

இருந்தாலும் இந்த கங்கையம்முனுக்கு இருக்க மவுசு தனிதான்.


இந்த விழாலதான், இயற்கை வழி உணவு உண்ணும் இருளர் மக்களும் பறை கொட்டி பல சேதி சொல்லும் மக்களும் ஊருக்கே துணி வெளுத்து தரும் மக்களும் உரிமையோடு பங்கேற்பாங்க.


இருளர் மக்கள், அவங்களோட மயக்கும் மெல்லிய குரல்ல மாரியம்மன வார்ணிச்சு பாடிட்டு இருந்தாங்க. 'அப்பா!'... என்னடா இப்டி பாடுறாங்கனு கொஞ்சம் முன்னாடி வந்து குளக்கரை விளிம்புல நின்னு ரசிக்கும்போது 'டேய்' சாமிக்கு கருப்புனா  பிடிக்காதுன்னு சொல்ல... கருப்பு சட்ட போட்ட நான்  அப்படியே பின்னாடி வந்துட்டன்.


அப்பத்தான் செய்தில  

'இந்த கருப்பு மனிதன் அந்த மாநிற மனிதர்களை கொல்ல தொடுக்கும் வெள்ளையர்களின் போரில் கலந்து கொள்ள மாட்டேன்' ன்ர  'முகமது அலி'யோட வசனத்தை கேட்டேன்.

கருப்பு சட்ட போட்டா... மாநிற மக்கள் கடவுளுக்கு பிடிக்காதுன்னு (கொஞ்சம்) வெளிய போ சொன்னாங்க. அப்ப அந்த வெள்ளை நிற சராசரி மக்கள் மாநிற மக்களையும் கருப்பு நிற மக்களையும் புறக்கணிக்கிறது இயல்பான ஒன்னுதானே?. வித்யாசத்த பாத்து  திகைச்சி தள்ளி நிக்குறது மனித சுபாவம்தான... ஆனாலும் ஒருதத்தர ஒருத்தர் புறக்கணிக்க கூடாது.


அதுஎன்னவோ தெரியல 

துக்க நாள கருப்பு நாள் சொல்றது 

கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கிறது 

கெட்ட எண்ணம்  கொண்ட ஹேக்கர கருப்பு தொப்பி ஹேக்கர்னு  சொல்றது 

கூட்டத்துல மாறுபடுறவள/ன  கருப்பு ஆடுனு சொல்றது

கருப்பு மாய மந்திரம்னு சொல்றதுன்னு

இப்டி துக்கத்துக்கு, எதிர்ப்புக்கு, கெட்டதுக்கு, மாறுதலுக்கு, மறுத்தலுக்கு, மர்மத்துக்கு கருப்பு ஓர் அடையாளம் ஆயிடிச்சு.


ஆனா, நம்ம ஊர்ல  பல சாமிங்க கருப்போட அடையாளமா இருக்கு 

  • ஐயப்பன் 
  • கருப்பசாமி 
  • முனீஸ்வரன் 
  • காட்டேரி 
  • காளியாத்தா 
  • ஏன்..? சனீஸ்வரன் கூட 

மேல சொன்ன சாமி எல்லாமே காவல் தெய்வங்களா பாக்றோம்.


என்னடா இப்படி நல்லதுக்கு கெட்டதுக்கும் கருப்பு சமமா இருக்கு யோசிச்ச நமக்கு கருப்பு  மேல இருக்க பயம் நியாயம் தான் தோணும் 

ஏன்னா சின்ன வயசுல நாம ரொம்ப பயப்பட்ட விஷயம் இருட்டு.!

  • இருட்டுல தான் பேய் வரும்.
  • இருட்டுல தான் பூச்சி பொட்டு வரும்
  • இருட்டுலதான் திருடன் வருவான்

இப்படி பல நமக்கு எதிரா நடக்கற விஷயம் எல்லாமே இருட்டுல தான் நடக்குது. அந்த இருட்டோட நிறம் கருப்பு. கருப்பு நிற பொருள் எல்லாமே வெளிச்சத்த உள் வாங்கி இருட்ட பரிசா தருது. அதனால அந்த கருப்பு சட்டை மேல இருக்கிற பயம் கருப்பு நிற மக்கள் மேல இருக்கிற பயம் ஒரு இயற்கையானது தான்.


இதே காரணத்துக்காக தான் இன்னைக்கு வரைக்கும் அம்மாவாசை, சூரிய கிரகணம்-சந்திர கிரிகணம் போன்ற வானியல் நிகழ்வுகளை ஒரு கெட்ட சகுனமா பாக்கிறோம்.


அந்த குளக்கரை சம்பவத்திலிருந்து நான் கருப்பு சட்டை போடுறத கொஞ்சம் நிறுத்தியாச்சு, சாமிக்கு பிடிக்காது... அபசகுனம்னு என்ற காரணத்துக்காக இல்ல எதுக்கு மக்களோட உள்ளார்ந்த பயத்தை தூண்டுவானேனு...


சட்டை நிறத்தை மாத்தலாம்  ஆனா மைக்கேல் ஜாக்சன் போல எல்லார்க்கும் தோல் நிறம் மாறாதில்லையா... அதனால மக்களோட தோல் நிறத்தை வச்சி நிராகரிக்கவோ வேற்றுமை படுத்தவோ வேண்டாமே...!