என்னதான்
கிழக்குல துலக்கானத்தம்மண் மேற்குல ஏரி கரை அம்மன்
தெற்குல செங்கழனியம்மன் வடக்குல நல்லாட்சியம்முனு
இருந்தாலும் இந்த கங்கையம்முனுக்கு இருக்க மவுசு தனிதான்.
இந்த விழாலதான், இயற்கை வழி உணவு உண்ணும் இருளர் மக்களும் பறை கொட்டி பல சேதி சொல்லும் மக்களும் ஊருக்கே துணி வெளுத்து தரும் மக்களும் உரிமையோடு பங்கேற்பாங்க.
இருளர் மக்கள், அவங்களோட மயக்கும் மெல்லிய குரல்ல மாரியம்மன வார்ணிச்சு பாடிட்டு இருந்தாங்க. 'அப்பா!'... என்னடா இப்டி பாடுறாங்கனு கொஞ்சம் முன்னாடி வந்து குளக்கரை விளிம்புல நின்னு ரசிக்கும்போது 'டேய்' சாமிக்கு கருப்புனா பிடிக்காதுன்னு சொல்ல... கருப்பு சட்ட போட்ட நான் அப்படியே பின்னாடி வந்துட்டன்.
அப்பத்தான் செய்தில
'இந்த கருப்பு மனிதன் அந்த மாநிற மனிதர்களை கொல்ல தொடுக்கும் வெள்ளையர்களின் போரில் கலந்து கொள்ள மாட்டேன்' ன்ர 'முகமது அலி'யோட வசனத்தை கேட்டேன்.
கருப்பு சட்ட போட்டா... மாநிற மக்கள் கடவுளுக்கு பிடிக்காதுன்னு (கொஞ்சம்) வெளிய போ சொன்னாங்க. அப்ப அந்த வெள்ளை நிற சராசரி மக்கள் மாநிற மக்களையும் கருப்பு நிற மக்களையும் புறக்கணிக்கிறது இயல்பான ஒன்னுதானே?. வித்யாசத்த பாத்து திகைச்சி தள்ளி நிக்குறது மனித சுபாவம்தான... ஆனாலும் ஒருதத்தர ஒருத்தர் புறக்கணிக்க கூடாது.
அதுஎன்னவோ தெரியல
துக்க நாள கருப்பு நாள் சொல்றது
கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கிறது
கெட்ட எண்ணம் கொண்ட ஹேக்கர கருப்பு தொப்பி ஹேக்கர்னு சொல்றது
கூட்டத்துல மாறுபடுறவள/ன கருப்பு ஆடுனு சொல்றது
கருப்பு மாய மந்திரம்னு சொல்றதுன்னு
இப்டி துக்கத்துக்கு, எதிர்ப்புக்கு, கெட்டதுக்கு, மாறுதலுக்கு, மறுத்தலுக்கு, மர்மத்துக்கு கருப்பு ஓர் அடையாளம் ஆயிடிச்சு.
ஆனா, நம்ம ஊர்ல பல சாமிங்க கருப்போட அடையாளமா இருக்கு
- ஐயப்பன்
- கருப்பசாமி
- முனீஸ்வரன்
- காட்டேரி
- காளியாத்தா
- ஏன்..? சனீஸ்வரன் கூட
மேல சொன்ன சாமி எல்லாமே காவல் தெய்வங்களா பாக்றோம்.
என்னடா இப்படி நல்லதுக்கு கெட்டதுக்கும் கருப்பு சமமா இருக்கு யோசிச்ச நமக்கு கருப்பு மேல இருக்க பயம் நியாயம் தான் தோணும்
ஏன்னா சின்ன வயசுல நாம ரொம்ப பயப்பட்ட விஷயம் இருட்டு.!
- இருட்டுல தான் பேய் வரும்.
- இருட்டுல தான் பூச்சி பொட்டு வரும்
- இருட்டுலதான் திருடன் வருவான்
இப்படி பல நமக்கு எதிரா நடக்கற விஷயம் எல்லாமே இருட்டுல தான் நடக்குது. அந்த இருட்டோட நிறம் கருப்பு. கருப்பு நிற பொருள் எல்லாமே வெளிச்சத்த உள் வாங்கி இருட்ட பரிசா தருது. அதனால அந்த கருப்பு சட்டை மேல இருக்கிற பயம் கருப்பு நிற மக்கள் மேல இருக்கிற பயம் ஒரு இயற்கையானது தான்.
இதே காரணத்துக்காக தான் இன்னைக்கு வரைக்கும் அம்மாவாசை, சூரிய கிரகணம்-சந்திர கிரிகணம் போன்ற வானியல் நிகழ்வுகளை ஒரு கெட்ட சகுனமா பாக்கிறோம்.
அந்த குளக்கரை சம்பவத்திலிருந்து நான் கருப்பு சட்டை போடுறத கொஞ்சம் நிறுத்தியாச்சு, சாமிக்கு பிடிக்காது... அபசகுனம்னு என்ற காரணத்துக்காக இல்ல எதுக்கு மக்களோட உள்ளார்ந்த பயத்தை தூண்டுவானேனு...
சட்டை நிறத்தை மாத்தலாம் ஆனா மைக்கேல் ஜாக்சன் போல எல்லார்க்கும் தோல் நிறம் மாறாதில்லையா... அதனால மக்களோட தோல் நிறத்தை வச்சி நிராகரிக்கவோ வேற்றுமை படுத்தவோ வேண்டாமே...!